நவராத்திரி கொலு - பார்வையாளர்கள் வியப்பு
பதிவு : அக்டோபர் 12, 2018, 09:45 AM
தேனியில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகள் கொலுவாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேனியில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகள் கொலுவாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்வையாளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். நவராத்திரியையொட்டி சிறுவர்- சிறுமியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சியும் அரங்கேறியது. 

சீதைக்கு அனுமன் காட்சி தரும் வைபவம் 

நவராத்திரி விழாவையொட்டி, கும்பகோணம் ராமர் கோயிலில், சீதைக்கு அனுமன் காட்சி தரும் வைபவம் நடந்தது. உற்சவர் மண்டபத்தில் ராமர் சீதை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சுமார் 12 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வை ஏராளமான பக்தி பரவசத்துடன் பார்த்த பக்தர்கள், ராமர், சீதை, அனுமனை தரிசனம் செய்தனர். 

நவராத்திரி - பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை

நவராத்திரியை ஒட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் பத்திரகாளி அம்மனுக்கு குங்கும நாயகி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொலு மண்டபத்தில் விநாயகர், பெருமாள், சரஸ்வதி  உள்ளிட்ட ஏராளமான  தெய்வங்கள் மற்றும்  கொலு பொம்மைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

உஜ்ஜயினி மாகாளி கோயில் நவராத்திரி உற்சவம்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு  ராமேஸ்வரம் காவல் தெய்வமாக உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு  பாலபிஷேகம் நடைபெற்றது. சிங்கேரி மடத்திலிருந்து நான்கு ரத வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க பால் குடம் எடுத்து வந்து உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் உள்ளூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பர்வதவர்த்தினி கோயில் நவராத்திரி உற்சவம்

ராமேஸ்வரத்தில், நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி, மகாலட்சுமி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொலு மண்டபத்தில் உள்ள  சக்கரத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றன.  

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1679 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1787 views

பிற செய்திகள்

தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

6 views

"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்" - திருவாடுதுறை ஆதினம்

சபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்

6 views

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

91 views

வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

86 views

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.