பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை : கடத்தலா? தற்செயலா? போலீசார் தீவிர விசாரணை
பதிவு : அக்டோபர் 12, 2018, 07:57 AM
பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத மாணவன் முன்பின் தெரியாத பெண்ணுடன் செல்வது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளதால், மாணவன் கடத்தப்பட்டனா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் புதுதெரு பகுதியை சேர்ந்த சசிக்குமாரின் மகன் ஹரிவசந்த், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். மாலையில் மகனை வீட்டுக்கு அழைத்து வர தாய் சாந்தி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் ஹரிவசந்த் காணாததால், காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கதக்க முன்பின் தெரியாத பெண்ணுடன் ஹரிவசந்த் செல்வது பதிவாகியிருந்தது.

இந்நிலையில் கடத்தல் முயற்சியில் அந்த பெண் ஹரிவசந்தை அழைத்து செல்கிறாரா, அல்லது வேறேதும் காரணங்களுக்காக ஹரிவசந்த் வீட்டை விட்டு சென்றுவிட்டானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

பிற செய்திகள்

செல்போன் கொள்ளையர்கள் அட்டூழியம்..!

சென்னை வளசரவாக்கத்தில் 61 வயது முதியவரிடம் முகவரி கேட்பது போல் வந்த நபர்கள் திடீரென சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

38 views

மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை..!

தூத்துக்குடியில் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

64 views

500 மாணவர்கள் நடத்திய பேண்டு வாத்திய இசை மழை

ஊட்டியில் சர்வதேச பள்ளி மைதானம் ஒன்றில் 500 மாணவ, மாணவிகள் இணைந்து பேண்டு வாத்திய இசை விழாவை நடத்தினர்.

14 views

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா..!

திருச்செந்தூர் அருகே குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்கள் அம்மன் அருளைபெற ஆக்ரோசமாக ஆடினர்.

17 views

தமிழகம் முழுவதும் பரவலாக மழை..!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

39 views

மகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்

மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார்.

1322 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.