பால் கொள்முதலில் ஆவின் புதிய சாதனை : ஒரே நாளில் 35,53,000 லிட்டர் கொள்முதல்
பதிவு : அக்டோபர் 12, 2018, 07:50 AM
இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 35 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, கடந்த 1981ஆம் ஆண்டு, ஆவின் நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. நாள்தோறும் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், நாளொன்றுக்கு அதிகபட்ச கொள்முதலாக கடந்த வாரம் 35 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இந்த அளவு படிப்படியாக உயர்ந்து, தற்போது ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 35 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தின் பால் தேவையில் 85 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்து வருவதாக, அதன் நிர்வாக இயக்குனர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

513 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2763 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4789 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

6104 views

பிற செய்திகள்

பேரூராட்சி வார்டுகள் மக்கள் தொகைப்படி மறுவரையறை அரசிதழில் வெளியானது

தமிழகத்தில், மாற்றமின்றி 8288 வார்டுகள் மறுவரை செய்யப்பட்ட விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

0 views

கேரள ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் விவகாரம் : மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவி துறைத்தலைவர் கர்ண மகாராஜன் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார்.

2 views

மதுரை எய்ம்ஸ் - வசதிகள் என்ன?

தமிழகம் மற்றும், தெலுங்கானாவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கூடுதல் தகவல்களை தற்போது பார்ப்போம்.

18 views

மதுரையில் எய்ம்ஸ்: பிரதமர் மோடிக்கு நன்றி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நன்றி தெரிவித்துள்ளார்

16 views

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

13 views

இளையவர்களுக்கான பைக் ரேஸ் : 14 வயது முகமது மிக்கேல் அசத்தல்..

இளைஞர்களுக்கான பைக் ரேஸில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த முகமது மிக்கேல் என்ற 14 வயது சிறுவன் கலக்கி வருகிறான்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.