ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்....
பதிவு : அக்டோபர் 11, 2018, 05:22 PM
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
* நடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டங்கள் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

* இதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

"5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படும்" - கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்

இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

314 views

பிற செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

55 views

அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

18 views

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

23 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

12 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.