நவராத்திரி விழா - கோவில்களில் சிறப்பு பூஜை...
பதிவு : அக்டோபர் 11, 2018, 08:34 AM
நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நவராத்திரியை ஒட்டி கொலு கண்காட்சி

இதே போல் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில்  நவராத்திரி விழா கோலாகலமாக  தொடங்கியது. முதலாம் திருநாளான நேற்று  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தாயார்,  ராஜ அலங்காரத்தில் உள்வீதி உலா வந்து, கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகன மண்டபத்தில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது இருப்புறமும் திரண்டு இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்க கற்பூர ஆரத்தி எடுத்தும் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். 

ராமநாதசாமி கோயிலில் நவராத்திரி விழா 

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து  மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் உள்பட ஏராளமானோர் அன்னபூரணி அம்பாளை தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள  கொலுவையும் பக்தர்கள் கண்டு களித்தனர்.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்மன் வீதி உலா...

இரவு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில், துர்க்கை கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2676 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2557 views

பிற செய்திகள்

அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை

அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

28 views

காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காருக்குள் இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை.

11 views

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 3ம் நாள் திருவிழா

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசியையொட்டி பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறுது.

10 views

டிச.12 முதல் பெரிய ரக சரக்கு கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி துறைமுகம் 12 புள்ளி 6 மீட்டர் ஆழமாக இருந்ததால்,பெரிய ரக கப்பல் போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

28 views

சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து

மதுரையில் இருந்து பெங்களுர் சென்ற தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை தர்மபுரி அருகே சாலையின் நடுவே திடீரென தீப்பிடித்து எரிந்தது.

80 views

பெண்கள் பாதுகாப்புக்காக "181" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.