வேட்பாளர்கள் மீதான வழக்கு விவரங்கள் : படிவம்-26 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப திருத்தம்
பதிவு : அக்டோபர் 11, 2018, 03:39 AM
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனி தங்கள் மீதான வழக்கு விவரங்களை வேட்பு மனுவுடன் விரிவாக தெரிவிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் படிவம்-26-ல் திருத்தம் செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை, வேட்பு மனுவுடன் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் தற்போது படிவம் எண் 26-ல் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்துள்ளது. இனி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை விரிவான வகையில், திருத்தப்பட்ட படிவம்-26-ல் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.இதுதவிர, ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தன் மீதான வழக்கு விவரங்களை கட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதுதவிர, இந்த விவரங்களை அந்த அரசியல் கட்சி, தனது இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயமாகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இந்த தகவல்களை குறைந்தபட்சம் 3 முறையாவது அதிகம் விற்பனையாகும் செய்தித்தாள் மற்றும் அதிகம் பேர் பார்க்கும் ஊடகத்தில் விரிவாக சம்மந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியால் மக்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.விளம்பரம் செய்ததற்கான படிவம் சி-1-ஐ வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி, வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். மாநில தேர்தல் அதிகாரி 15 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்துக்கு விளம்பரம் செய்ய தவறியவர்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர அரசு கட்டடங்களை மற்றும் வசதிகளை பயன்படுத்தியதற்கான கட்டண பாக்கி தொடர்பாகவும் படிவம்-26 உட்பிரிவு 8-ல் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த திருத்தம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

94 views

பிற செய்திகள்

போலீஸை புரட்டியெடுத்த இளைஞர்கள் : வரிசையில் நிற்க சொன்னதால் வாக்குவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா ரயில்நிலையத்தில், 2 இளைஞர்கள் இணைந்து, போலீஸாரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 views

தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

61 views

உத்தரப்பிரதேசம் : இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில், இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

9 views

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

98 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

70 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

1156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.