#MeToo என்றால் என்ன?...
பதிவு : அக்டோபர் 10, 2018, 04:11 PM
மாற்றம் : அக்டோபர் 10, 2018, 04:13 PM
இணையவாசிகள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது Me too என்ற hash tag.
* #MeToo, சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு hashtag.இணையவாசிகள் பலருக்கும் இந்த hash tag பரிச்சயம். இணையத்தில் இல்லாதவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.

* #MeToo என்பது, "நானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்" என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு வாக்கியம்.

* தங்களை பாலியல் ரீதியாக சீண்டிய ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டம் தான் இந்த #MeToo 

* இந்த போராட்டத்தை தொடங்கியவர்,  Alyssa Milano என்ற அமெரிக்க நடிகை. கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த hash tag இயக்கம், அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியா உடபட பல நாடுகளில் பெரும் புயலைக் கிளப்பியது.

* சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களில், சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர், metoo hash tag-யை பதிவிட்டு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை குறிப்பிடத் தொடங்கினர்.

* இதில் அதிகம், சர்ச்சையில் சிக்கியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தான். இவர் மீது மட்டும் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் விளைவாக,  அமெரிக்க போலீஸ் அவரை கைது செய்தது.

* இந்தியாவிலும், இந்த hash tag பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆம் தேதியன்று, பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர், Utsav Chakraborty மீது ஒரு இளம்பெண் புகார் தெரிவித்தார். தொடர்ந்து பல பெண்கள் புகார் தெரிவிக்க, வேறு வழியில்லாமல், Utsav Chakraborty-யும் மன்னிப்பு கேட்டார்.

* இதே போல பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் ராஜத் கபூரும், #Metoo hash tag-ல் சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டனர். 

* பிரபல இந்தி நடிகர் நானா படேக்கர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா, பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அதை நானா படேகர் மறுத்தார். 

* பூஜா பட், கங்கானா ரனாவத் உள்ளிட்ட நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை #MeToo-வில் பகிர்ந்தனர்...

* புண்பட்ட மனங்களுக்கு ஆறுதலையும், தவறு செய்தவர்களுக்கு குற்றவுணர்வையும் தரும், இந்த #Metoo hash tag, தமிழகத்திலும் பரவத் துவங்கி, பல பிரபலங்களின் அடையாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டத் துவங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் அர்ஜுனுக்கு எதிராக பாலியல் புகார் : ஸ்ருதிக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு

நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

4770 views

#MeToo புயல் : திரைத்துறைக்கு 500 கோடி நஷ்டம்

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது.

2431 views

பிற செய்திகள்

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த‌தை கண்டு, வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட கணவர், கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்

2 views

செல்போன் திருடியதாக முதியவர் கொலை - இளைஞர் கைது

கரூர் அருகே செல்போன் திருடியதாக முதியவரை தலையில் கல்லை போட்டு செல்வராஜ் கொலை செய்துள்ளார்

7 views

உலக அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி - பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

8 views

மக்களவை தேர்தல் - களையிழந்து காணப்படும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை மட்டும் களை இழந்து காணப்படுகிறது

19 views

"கமல் களத்தில் கிடையாது" - ராஜேந்திர பாலாஜி

"அதிமுகவிற்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர்" - ராஜேந்திர பாலாஜி

27 views

"என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர்" - துரைமுருகன்

நாடாளுமன்றம் செல்ல வேண்டுமானால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.