தமிழக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை..!
பதிவு : அக்டோபர் 09, 2018, 05:46 PM
மாற்றம் : அக்டோபர் 09, 2018, 08:25 PM
ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.
தமிழக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கூறி சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து 124 பிரிவின் கீழ் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோபாலை 124 சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது செல்லாது என ஊடக பிரதிநிதியான இந்து ராம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் எந்த வித முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நக்கீரன் கோபால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 


நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தவறாக அமையும் - என்.ராம்


நக்கீரன் கோபால் விடுதலை: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் - முத்தரசன்


நக்கீரன் கோபால் விடுதலை: சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி - திருமாவளவன் 


நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார் - பி.டி பெருமாள், வழக்கறிஞர்


தொடர்புடைய செய்திகள்

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

137 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

150 views

"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது

1722 views

தமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

942 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

699 views

பிற செய்திகள்

சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

12 views

மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

13 views

சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

17 views

8 வழி சாலைக்காக ஆட்சேபனை கூட்டம் - கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

11 views

"மகளிர் பிரச்சனை குறித்து 181 என்ற எண்ணில் கூறலாம்" - மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தகவல்

மகளிருக்கான பிரச்சனை குறித்து 181 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தெரிவித்தார்.

27 views

மத்திய பாதுகாப்பு வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து -அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீடீரென்று தீ விபத்து நிகழ்ந்தது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.