நக்கீரன் கோபாலை காண அனுமதி மறுப்பு : தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் வைகோ கைது
பதிவு : அக்டோபர் 09, 2018, 12:46 PM
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நக்கீரை கோபாலை பார்ப்பதற்காக, அங்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, காவல் நிலையம் முன்பு போலீஸார் தடுத்து நிறுத்தனர். அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தன்னை வழக்கறிஞர் என்ற முறையில் உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுகொண்டார். போலீஸார் அனுமதிக்காததை தொடர்ந்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
 
தர்ணா போராட்டம் - வைகோ கைது இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீஸார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட வைகோவுக்கு, ஆதரவாக அவரது கட்சியினர் உள்ளிட்ட சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில், வைகோவை கைது செய்த போலீஸார், அவரை வேனில் ஏற்றிச்சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1679 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1786 views

பிற செய்திகள்

"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்" - திருவாடுதுறை ஆதினம்

சபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்

0 views

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

14 views

வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

84 views

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

96 views

நைட்டி அணிந்த சென்று பள்ளியில் ரூ.26.36 லட்சம் திருட்டு

கன்னியாகுமரி, நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது

1694 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.