"நியூட்ரினோவிற்குஅனுமதி வழங்கவில்லை"- தமிழக அரசு
பதிவு : அக்டோபர் 09, 2018, 11:08 AM
மாற்றம் : அக்டோபர் 09, 2018, 04:27 PM
நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

* வழக்கின் இன்றைய விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

* திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மனு அளித்திருந்ததாகவும், அந்த மனுவை அரசு திருப்பி அனுப்பியதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த ஏப்ரல் மாதம் அரசு ஆய்வு நடத்தியதாகவும், அங்கு எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் பதில் மனுவை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பிற செய்திகள்

சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

2 views

சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

13 views

மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

13 views

சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

17 views

8 வழி சாலைக்காக ஆட்சேபனை கூட்டம் - கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

11 views

"மகளிர் பிரச்சனை குறித்து 181 என்ற எண்ணில் கூறலாம்" - மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தகவல்

மகளிருக்கான பிரச்சனை குறித்து 181 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தெரிவித்தார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.