50 ஆண்டுகளைக் கடந்து மக்களின் ஆதரவோடு இயங்கி வரும் முதுகுளத்தூர் சந்தை
பதிவு : அக்டோபர் 08, 2018, 05:40 PM
50 ஆண்டுகளைக் கடந்து மக்களின் ஆதரவோடு இயங்கி வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இயங்கி வரும் இந்த சந்தை அப்பகுதி மக்களிடையே பிரசித்தம். காரணம் வாரத்தில் ஒரு நாள் நடக்கும் இந்த சந்தைக்கு சுற்றிலும் உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் திரளாக கூடுகிறார்கள். 

50 ஆண்டுகளாக மக்கள் வெள்ளத்துடன் காட்சி தரும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் என எல்லாம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது.. அன்றாட சமையலுக்கு பயன்படும் காய்கறிகள், மளிகை சாமான்களை இங்கு வந்து வாங்கிச் செல்லும் மக்கள் அதிகம். 

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு முதல் நாளே ஆயத்தப்பணிகள் தொடங்கி விடுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள காக்கூர், கருமல், தேருவேலி, கீழத்தூவல் என 30க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த சந்தை தான் பெரிய ஆதாரமாக இருக்கிறது. 

இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் என எல்லாம் இந்த சந்தையில் கிடைப்பதே இங்கு மக்கள் கூட்டம் அதிகம் வர காரணம்.. கீரைகள் எப்போதும் ப்ரெஷ் ஆக கிடைக்கும் சந்தை இது. அதேபோல் குழந்தைகளை கவரும் விதவிதமான வத்தல், வடகமும் இந்த சந்தையில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

கடற்பகுதி சார்ந்த இடம் என்பதால் இங்கு கருவாடு விற்பனை ஜோராகவே நடக்கிறது. விதவிதமான கருவாடுகளும் அதிகம் விற்பனை ஆகும் சந்தை இது. அதேபோல் சுத்தமான கருப்பட்டி வாங்க விரும்புவோருக்கு ஏற்ற இடம் இது. 

பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த சந்தை நடப்பதால் மக்கள் வந்து செல்வதும் எளிதாகவே இருக்கிறது.  மற்ற கடைகளில் கிடைப்பதை விட இங்கு விலை குறைவு என்பதோடு எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் என்பதும் சிறப்பு.. இதனால் முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு ஒரு திருவிழா போல காட்சி தரும் இடமாகவே மாறியிருக்கிறது இந்த சந்தை... 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1602 views

பிற செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி

ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

775 views

காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

145 views

ரூ.12 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியில் உலா வரும் நெசவாளர்

ஆரணி அருகே நெசவாளர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ள மாடு மற்றும் மாட்டு வண்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

1336 views

கன்னியாகுமரி : பரிவேட்டைக்கு புறப்பட்ட பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் திருவிழாவான இன்று அம்மன், பாணாசூரனை வதம் செய்ய வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

77 views

நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை : 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

மதுரையில் நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3761 views

பழனிமலை கோவிலில் வன்னிகாசுரன் வதம் : மலைக்கோவில் அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வன்னிகாசுரனை வதம் செய்யும் நிகழ்வை ஒட்டி, மலைக்கோவில் மூலஸ்தானம் அடைக்கப்பட்டது.

219 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.