பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
பதிவு : அக்டோபர் 07, 2018, 12:28 PM
பால் கொடுக்க முடியவில்லை என பச்சிளங் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் 5-வது  தெருவில் வசிப்பவர் வெங்கண்ணா. ஆந்திராவை சேர்ந்த இவர், தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும் உமா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் குழந்தையை காணவில்லை என வேளச்சேரி காவல் நிலையத்தில் வெங்கண்ணா நேற்று புகார் அளித்தார்.  காற்றுக்காக வீட்டின் வாசல் கதவை பூட்டாமல் திறந்து வைத்து அனைவரும் படுத்திருந்ததாகவும்,  அதிகாலை எழுந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார். வீட்டின் அருகே பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்க வில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  

அப்போது குழந்தையின் தாய் உமா முன்னுக்கு பின் முரனாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அவரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது  குழந்தைக்கு தாய்ப்பால் தரும் போது கடுமையான வலி ஏற்பட்டதால் குழந்தையை  ஏரி கால்வாயில்  வீசியதாக உமா ஒப்புக்கொண்டார். இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

பால் தர முடியாததால் பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகு​தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2675 views

பிற செய்திகள்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

7 views

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

6 views

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

6 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

5 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.