இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...
பதிவு : அக்டோபர் 07, 2018, 09:29 AM
இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதி சிரபுஞ்சி என்று தான் சொல்வார்கள்... ஆனால், இதற்கு அருகில் உள்ள Mawsynram என்ற மலை கிராமம்,  சிரபுஞ்சியை பின்னுக்கு தள்ளிவிட்டது... 

மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சியில் ஆண்டுக்கு, சராசரியாக, 11 ஆயிரத்து 619 மி.மீ., மழைப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், Mawsynram-ல் சராசரியாக 11 ஆயிரத்து 872 மி.மீ., மழை பெய்துள்ளது... இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது... மேலும், ஆசியாவில் அதிக மழை பெறும் பகுதியாகவும் கருதப்படுகிறது...

கர்நாடகா :
அகும்பே மழைப் பொழிவு - 7,691 மி.மீ.
அகும்பே - தென்னிந்தியாவின் சிரபுஞ்சி

அடுத்தது, Agumbe... பெங்களூரிலிருந்து 380 கி.மீ. தொலைவில் உள்ளது அகும்பே மலைப் பிரதேசம். இது, தென் இந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள இந்த மலைப்பாங்கான சுற்றுலா தலத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 7 ஆயிரத்து 691 மி.மீ. மழை பெய்கிறது. மழைக் காலங்களில் இங்குள்ள  நீர்வீழ்ச்சிகளில், தண்ணீர் கொட்டும் காட்சி காண்பவர் மனதை கொள்ளை கொண்டு விடுகிறது... 

மகாராஷ்டிரா :
அம்போலி - 7,500 மி.மீ. சராசரி மழைப் பொழிவு
மூடு பனி சூழ்ந்த மலைப்பிரதேச சொர்க்கபுரி

அடுத்தது Amboli... மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள  ஒரு மலைப் பிரதேசமாகும். மூடுபனி சூழ்ந்த சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது.. இங்கு, ஆண்டு சராசரி மழைப்பொழிவு 7 ஆயிரத்து 500 மி.மீ. ஆகும். 

மகாராஷ்டிரா :

மஹாபலீஸ்வர் - 5,618 மி.மீ., மழைப் பொழிவு
உயரமான மலைப் பிரதேச பகுதிகள்

அடுத்தது Mahabaleshwar... இதுவும் மகாராஷ்டிரா மாநிலம் தான்... சாத்தாரா மாவட்டத்தில் மஹாபலீஸ்வர் அமைந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப் பிரதேசமான இங்கு, ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 618 மி.மீ. மழைப்பொழிவு காணப்படுகிறது. மும்பையில் இருந்து 5 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்... இந்த இடம் சிறந்த சுற்றுலா தலமாகவும், தேன்நிலவிற்கேற்ற இடமாகவும் பிரபலமடைந்துள்ளது. 
  
அருணாச்சல பிரதேசம் :
பாசிகாட் - 4,388 மி.மீ., மழைப் பொழிவு
தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி

அடுத்தது, Pasighat ... இது, அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசலப் பிரதேசத்தின் பழமையான நகரங்களில் ஒன்று... இங்கு ஆண்டு மழைப்பொழிவு 4 ஆயிரத்து 388 மில்லி மீட்டராக இருக்கிறது... இது, இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்... 

சிக்கிம்
காங்டாக் - 3,737 மி.மீ. மழைப் பொழிவு

அடுத்தது Gangtok... சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான கேங்டாக், இமயமலையின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரை சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது, கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது. இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. ஊரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரத்து 737 மி.மீ. மழைப் பொழிவு காணப்படுகிறது... 

தென்மேற்கு பருவ மழை 40 மி.மீ.,
வட கிழக்குப் பருவமழை 440 மி.மீ.,

இதெல்லாம் சரி... தமிழகத்தின் மழைப்பொழிவு எவ்வளவு தெரியுமா...?

தென்மேற்கு பருவமழையின்போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 40 மி.மீ ஆகும்... வட கிழக்கு பருவமழையில் தமிழகத்தின் சராசரி மழை அளவு 440 மி.மீ. ஆகும்... இதற்கே ஆடிப் போய் விடுகிறார்களே...?

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1724 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3006 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3291 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5566 views

பிற செய்திகள்

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு எந்தளவு உள்ளது? - தேசிய குடும்பநல கள ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு என்பது, வெறும் ஒரு சதவீதத்தினரிடம் மட்டுமே இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

7553 views

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு

பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

117 views

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

11 views

ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்

ஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2723 views

பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ

பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

1236 views

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்

பாலியல் புகாரில் சிக்கிய, முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக, வாக்குமூலம் அளித்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

1029 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.