தமிழக இடைத்தேர்தல் இப்போது இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் விளக்கம்
பதிவு : அக்டோபர் 07, 2018, 04:18 AM
மாற்றம் : அக்டோபர் 07, 2018, 06:51 AM
தமிழகத்தில் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் தேதி, அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், வாக்குப்பதிவு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில தேர்தல் தேதியை, தேரதல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், சத்தீஷ்கர் மாநிலத்திற்கு, 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றார். இதன்படி,  நவம்பர் 12 -  ல்முதற்கட்ட வாக்குப்பதிவும்,  நவம்பர் 20 ல் -  2 - வது கட்ட வாக்குப்பதிவும்  நடைபெறும். மத்திய பிரதேசம் மற்றும் மிசோராமில் நவம்பர் 28 - ல் வாக்குப்பதிவு நடைபெறும் . ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை, டிசம்பர் 7 -ல் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் கலைக்கப்பட்ட தெலங்கானாவிலும், டிசம்பர் 7 - ல் வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், டிசம்பர். 11 - ல் எண்ணப்பட்டு, அதே நாளில், முடிவகள் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ. பி. ராவத் அறிவித்தார். இந்த தேர்தலின்போது, யாருக்கு வாக்களித்தோம்? என்பதை பார்க்கும் ஒப்புகைச்சீட்டு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்தார். 

தமிழக இடைத்தேர்தல் இப்போது இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் விளக்கம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.  தற்போது தமிழகத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால்,  புயல் சீசன் முடிந்தபிறகு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு  தமிழக அரசு கடிதம் எழுதிய தகவல் வெளியாகியுள்ளது  

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை  அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத், தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு , திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார் ..  இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடித விவரங்கள் வெளியாகியுள்ளன.  தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமாக பருவமழை  பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் பெய்த அதிக மழை மற்றும் புயல்கள்  காரணமாக  கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியான திருவாரூர் தொகுதியில் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்றும், அங்கு  ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மாநில அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பது சரியாக இருக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அதிமுக உறுப்பினர் ஏ.கே. போஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி சரவணன் தொடர்ந்த வழக்கின் விசாரணை இறுதி வாதங்களுக்காக வரும் 23 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்தகைய சூழலில் இடைத்தேர்தல் அறிவித்தால் அது உயர்நீதிமன்ற அதிகார வரம்பை மீறுவதாகும் என்றும்   அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழக்கு முடியும் வரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்றும் அதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தாமதம் ஆகலாம்" - 27.09.18 அன்றே சொன்ன தந்தி டி.வி. 

வழக்கு நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்துவதில் மேலும் காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது என கடந்த மாதம் 27 ஆம் தேதி தந்தி டி.வி. செய்தி வெளியிட்டது. இதே காரணம், தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பயிர் கடன்களுக்குகான வட்டி முற்றிலும் தள்ளுபடி - மத்திய அரசு பரிசீலனை

உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

159 views

5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்

5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

121 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோராவை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

282 views

பிற செய்திகள்

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு : திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் மீது புகார்

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், தனது மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது

7 views

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

89 views

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

114 views

அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

75 views

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் - அமைச்சர் ஜெயக்குமார்

விஜயகாந்துடனான திருநாவுக்கரசரின் சந்திப்பு திமுக கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் செய்துள்ளார்.

62 views

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.