எஸ்- 400 ஏவுகணை கொள்முதல் தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
பதிவு : அக்டோபர் 06, 2018, 04:32 AM
பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
டெல்லியில் நடைபெறும் இந்தியா- ரஷ்யா 19 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பிரதமர்  மோடியை புதின் சந்தித்து பேசினார். ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் போது இருதரப்பு உறவு, உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் இரு நாடுகள் இடையே ரயில்வே, விண்வெளி, பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுதாகின. ரஷ்யாவிடம் இருந்து சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எஸ் 400 டிரையம்ப் வகை 5 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பதமும் கையெழுத்தானது.  400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அடையாளம் காணும் இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் 36 இடங்களில் தாக்கும் வல்லமை கொண்டது. 

தீவிரவாதம் - சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட முடிவு

இதைத்தொடர்ந்து இரு நாட்டு  தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரு நாடுகள் இடையே நீண்ட கால நட்புறவு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வளர்ச்சியில் ரஷ்யா தொடர்ந்து பங்கேற்று வருவதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவதென உறுதி மேற்கொண்டுள்ளதாகவும் மோடி கூறினார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத்துடன், புதின் சந்திப்பு2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

65 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

462 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

648 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

152 views

பிற செய்திகள்

ராணுவ வீரர்களை கவுரவிக்க மாரத்தான் ஓட்டம்...

ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக டெல்லியில் இன்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

9 views

பெய்ட்டி புயல் : சமாளிக்க ஏற்பாடுகள் தீவிரம் - சந்திரபாபு நாயுடு நடவடிக்கை

வங்கக் கடலில் உருவாகி உள்ள பெய்ட்டி புயல், ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க உள்ள நிலையில் ஓங்கோல் காக்கிநாடா ஆகிய மாவட்டங்களில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

47 views

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 'அசோக் கெலாட்'

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் நாளை பதவியேற்கிறார்.

39 views

சபரிமலைக்கு செல்வதற்கு வந்த 4 திருநங்கைகள்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

498 views

நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பிரதமர் பார்வையிட்டார்

உத்தர பிரதேசத்தின் ரே பரேலி நகரில் உள்ள ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

30 views

"நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

​ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.