ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு தடை - சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு பெற நீதிமன்றம் உத்தரவு...
பதிவு : அக்டோபர் 06, 2018, 04:13 AM
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு பெற உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு மற்றும் காலரா தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்குகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் ஸ்டாலின் 
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த  நீதிபதி பி.என்.பிரகாஷ், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள  வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதே சமயம், ஸ்டாலின் நேரில் ஆஜராவதிலிருந்து  விலக்கு அளிக்க மறுத்த  நீதிபதி, 2 வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 5 ஆயிரம் ரூபாய்க்கான பிணை தொகையை செலுத்தி, விலக்கு பெற்று கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1031 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

980 views

பிற செய்திகள்

தீர்ப்பு வர உள்ள நிலையில் எங்கும் போக வேண்டாம் என தினகரன் கூறினார் - வெற்றிவேல்

தீர்ப்பு வர உள்ள நிலையில் எங்கும் போக வேண்டாம் என தினகரன் கூறினார் - வெற்றிவேல்

127 views

ஆடியோ விவகாரம் திட்டமிட்ட சதி : சட்டப்படி வழக்கு தொடருவேன் - அமைச்சர் ஜெயக்குமார்

ஆடியோ விவகாரம் திட்டமிட்ட சதி : சட்டப்படி வழக்கு தொடருவேன் - அமைச்சர் ஜெயக்குமார்

131 views

18 எம்எல்ஏக்கள் வழக்கு : அடுத்தது என்ன? - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு விளக்கம்

18 எம்எல்ஏக்கள் வழக்கு : அடுத்தது என்ன? - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு விளக்கம்

942 views

ஆளுநர் கிரண்பேடியின் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின், சமூக பொறுப்புணர்வு நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

16 views

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை

தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

854 views

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

186 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.