தினகரனை சந்தித்தது உண்மைதான் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
பதிவு : அக்டோபர் 06, 2018, 12:36 AM
மாற்றம் : அக்டோபர் 06, 2018, 12:39 AM
பழனிசாமி அணியுடன் இணைவதற்கு முன்பாக தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர், தினகரன் அழைப்பின்பேரில், இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.  தினகரன் மனம் திருந்தி பேச வருகிறார் என தாம் நினைத்ததாகவும், ஆனால் அவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தம்மை சந்தித்தாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

"முதல்வராக ஆசைப்பட்டார் டி.டி.வி. தினகரன்"

நான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது, தினகரனும், பழனிசாமியும் பிரிந்து விட்டனர். ஆட்சி கவிழும் என்று தினகரன் தினமும் சொல்லிக் கொண்டிருந்தார். தினகரன் சந்திக்க விரும்புவதாக பொதுவான நண்பர் ஒருவர் தெரிவித்தார். நண்பரின் வீட்டில் நானும், தினகரனும் சந்தித்தோம். மனந்திருந்தி தினகரன் பேச வருகிறார் என நான் நினைத்தேன். 
முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னிடம் தினகரன் பேசினார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பின்னர்தான், இரு அணிகளும் இணைந்தன. தினகரனுடன் பேசியது ஜூலை மாதம் நாங்கள் இணைந்தது ஆகஸ்ட் மாதம். கட்சிக்குள் குளறுபடி செய்து, திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். தினகரன் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது...தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1275 views

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

1003 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5800 views

பிற செய்திகள்

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

54 views

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .

27 views

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறு சீரமைப்பு செய்து வருகிறார் : கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

20 views

நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

18 views

குடிநீர் தட்டுப்பாடு : திமுக போராட்டம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

36 views

ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

147 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.