சுந்தர்பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழர்...
பதிவு : அக்டோபர் 05, 2018, 01:15 PM
மாற்றம் : அக்டோபர் 05, 2018, 01:20 PM
சுந்தர் பிச்சையை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்றொருவரை பெரிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
* சர்வதேச நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை அலங்கரிப்பதில் இந்தியர்களின் பங்கு அதிகரித்துள்ளது. பெப்சிகோ நிறுவனத்தின் இந்திரா நூயி,
காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ்கோ டிசோசா, அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் ஆகியோர் சர்வதேச நிறுவனங்களில் இருக்கும் இந்திய தலைவர்கள் ஆவார்கள்.

* அதேபோல் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபாகர் ராகவன்  தற்போது இணைந்துள்ளார்.

* 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்டுள்ள, கூகுள் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபாகர் ராகவன் சென்னையில் பிறந்தவர்.

* சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு யாகூ லேப்ஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, விளம்பர வர்த்தக பிரிவுக்கு பிரபாகர் ராகவனை விட, வேறு ஒருவர் மாற்றாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

* பிரபாகர் நம்பமுடியாத மேலாண்மை அனுபவமும் ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் பெற்றவர் எனவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் மேலும் ஒரு தமிழர்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபாகர் ராகவன்  இணைந்துள்ளார். கூகுள் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமனம். சென்னை ஐஐடியில் பட்டப்படிப்புகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு யாகூ லேப்ஸ், ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

தமிழக மருத்துவர் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்...

தமிழகத்தை சேர்ந்த பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளையொட்டி சிறப்பு DOODLEஐ வெளியிட்டு, கூகுள் நிறுவனம கொண்டாடியுள்ளது.

198 views

"கூகுள் வகுப்பறை அறிமுகம்"

இந்தியாவில் கூகுள் நிறுவனம்,வருங்காலத்தில் தொடங்கவுள்ள கூகுள் வகுப்பறை அகமதாபாத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

185 views

நேற்றுவரை சுமை தூக்கும் தொழிலாளி... நாளை அரசு பணியாளர்

திறமையை வைத்து வறுமையை வென்று சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமை தூக்கும் தொழிலாளி ஸ்ரீநாத்தை கூகுல் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளார்.

1807 views

பிற செய்திகள்

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு எந்தளவு உள்ளது? - தேசிய குடும்பநல கள ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு என்பது, வெறும் ஒரு சதவீதத்தினரிடம் மட்டுமே இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

7418 views

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு

பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

115 views

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

11 views

ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்

ஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2705 views

பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ

பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

1231 views

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்

பாலியல் புகாரில் சிக்கிய, முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக, வாக்குமூலம் அளித்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

1024 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.