ரெட் அலர்ட் என்றால் என்ன..?
பதிவு : அக்டோபர் 05, 2018, 10:09 AM
தமிழகத்தில் வரும் 7 தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், அதன் விளைவுகள் பற்றியும் மற்ற அலர்ட் விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்..
மழையின் அளவை முன்கூட்டியே கணித்து, அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே அலர்ட் விடப்படுகின்றன. கிரீன் , யல்லோ, ஆம்பர், ரெட் என அலர்ட் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மழையின் அளவை பொறுத்து அலர்ட் வகை மாறுபடுகிறது...

மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டாலே கிரீன் அல்லது பச்சை அலர்ட் விடப்படுகிறது. கிரீன் அலெர்ட்டால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதால், இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மழைக்கு தயாராக இருக்க வேண்டும் என சொல்வதற்கே கிரீன் அலர்ட் விடப்படுகிறது.

வானிலை மோசமாக உள்ளது என்பதை அறிவுறுத்தும் விதமாக யல்லோ அலர்ட் விடப்படுகிறது. இந்த அறிவிப்பு விடப்பட்டால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. 

அடுத்த‌தாக ஆம்பர் அலட்ர்ட்... உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படக்கூடிய அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்தவே ஆம்பர் அலர்ட் விடுக்கப்படுகிறது.

இந்த அலர்ட் விடப்படும் சமயங்களில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், பொதுமக்கள் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். மொத்த‌த்தில் மக்கள் அடிப்படை தேவைகளுடன் எப்போது வேண்டுமானாலும் மாற்று இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தவே ஆம்பர் அலர்ட் விடப்படுகிறது..

இறுதியாக ரெட் அலர்ட்... வானிலை மிக மிக மோசமாக மாற வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்குமாறு உணர்த்தவே ரெட் அலர்ட் விடப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கப்பட்டால்  நிலச்சரிவு, மரங்கள் வேறோடு சரியவும் வாய்ப்பு இருப்பதால்,  அனேக இடங்களில் மின் இணைப்பு, போக்குவரத்து துண்டிக்கப்படும். தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தும் வகையில் ரெட் அலர்ட் விடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1668 views

பிற செய்திகள்

விழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்

விழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்

8 views

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

18 views

நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

894 views

மணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்

7 views

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

12 views

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.