துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
பதிவு : செப்டம்பர் 22, 2018, 01:03 AM
நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
தாமிரபரணி கரைபுரண்டு ஓடும் நெல்லை மண்ணுக்கு பல சிறப்புகள் உண்டு. அத்தகைய பெருமைகளில் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தந்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷில்பா கடந்த 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 46வது இடம் பிடித்தார். 

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட ஷில்பா, அதன்பிறகு திருப்பத்தூர் சார் ஆட்சியராக 3 ஆண்டு காலம் பணிபுரிந்தார். 2015 ஆம் ஆண்டு தொழில் துறையில் தொழில் வழிகாட்டல் பிரிவில் நிர்வாக தலைவராக பணியில் இருந்த அவர் கடந்த மே மாதம் நெல்லை மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர்களாக இதுவரை ஆண்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக இந்த மாவட்டத்துக்கு ஒரு பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வந்தார் ஷில்பா.. பணியில் சேர்ந்த 3 வது நாள் கங்கை கொண்டான் தொழில் பூங்காவில் 200 கோடி மதிப்பிலான உணவு பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் அவர், சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்கப்படும் துணிப்பைகளை சொந்தப்பணத்தில் வாங்கி மக்களுக்கு வழங்கி வருகிறார். மாற்றுத் திறனாளிக்கென தனி குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்துகிறார் ஷில்பா பிரபாகர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற போதிலும் மருத்துவ படிப்பில் சேர பணமில்லாமல் தவித்த துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டார் ஷில்பா. கிராமங்களுக்கு அவ்வப்போத ஆய்வுக்கு செல்லும் ஆட்சியர் ஷில்பா அங்கு மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் சரிசெய்து கொடுத்தார். 

ஷில்பாவின் துணிச்சலும், தனித்துவமும் விநாயகர் ஊர்வலத்தின் போது தான் வெளிப்பட்டது. மோதலுக்கு காரணமாக இரு தரப்பையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைத்தார். தற்போது ஷில்பா பிரபாகர் முன் சவாலாக நிற்பது தாமிரபரணி புஷ்கரம் விழா. முதலில் தடை, பிறகு எங்கெல்லாம் தடை என பயணிக்கும் புஷ்கரத்தையும், அசம்பாவிதங்கள் நடக்காமல் கவனமாக கையாள்வார் என்பது நெல்லை மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3913 views

பிற செய்திகள்

தேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.

99 views

எல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

232 views

சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

8 views

சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

23 views

மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

27 views

"சிறந்த நடிகை " : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்

கடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

141 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.