மத மோதலை உருவாக்குமா, புஷ்கர விழா...?
பதிவு : செப்டம்பர் 21, 2018, 12:43 AM
தாமிரபரணி புஷ்கர விழா, மத மோதலை உருவாக்குமா? அந்த விழா நடக்குமா? என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 12ம் தேதி முதல் 23 வரை புஷ்கர விழாவை நடத்த ஆன்மிக அமைப்புகள் அனுமதி கோரி இருந்தன. மனுக்களை பரிசீலித்த நெல்லை ஆட்சியர், குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச மண்டபம் மற்றும் படித்துறையில் விழா நடத்த அனுமதி மறுத்துள்ளார்.  

இந்த விழா தொடர்பாக அறநிலைய துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது, அக்டோபர் மாதத்தில் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கூடவே, வெள்ளத்தை தாண்டி, 'ஆகம விதி மீறல்' காரணமாகவும் அனுமதி மறுப்பு என கூறினர். 

இன்னொரு புறம், நெல்லை ஆட்சியர், அனுமதி மறுப்புக்கு மத மோதல் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காரணத்தை கூறியுள்ளார். இது தொடர்பான அவரது உத்தரவில், தைப்பூச மண்டபம் அருகில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இருப்பதாகவும்
அங்கு வரும் அனைத்து மத, இனம் சார்ந்த மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 1999ம் ஆண்டில் நடந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, தைப்பூச மண்டபம் அருகில் தான், 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாகவும்

பலரும் உயிர் நீத்த இடமானது, மத வழிபாடு நிகழ்ச்சி நடத்த உகந்தது அல்ல எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, தைப்பூச மண்டபம் அருகில், பாலம் கட்டும் பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகனங்கள் இருப்பதையும் ஆட்சியர் தனது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளார்.  

இதுபோல, நெல்லை தாமிரபரணி படித்துறையானது பல நூற்றாண்டு பழமையானது என்பதால், அதிகபட்சம் 80 பேர் மட்டுமே நீராட முடியும் எனவும் புஷ்கர விழாவில் கூடும், நூற்றுக்கணக்கான மக்களை அங்கு அனுமதிக்க முடியாது எனவும் ஆட்சியரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

தாமிரபரணி புஷ்கர விழாவை, தைப்பூச மண்டபம் மற்றும் படித்துறையில் நடத்துவதற்கு அனுமதி கேட்ட நிலையில் மாநகர காவல் ஆணையர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரியின் கடிதங்களை மேற்கோள் காட்டி நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து, திட்டமிட்டபடி புஷ்கர விழா நடைபெறுமா அல்லது மற்ற இடங்களிலும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகளை காரணம் காட்டி விழாவுக்கு அனுமதி மறுக்கப்படுமா என்ற கேள்வியும் குழப்பமும் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1264 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2476 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1546 views

பிற செய்திகள்

சென்னையில் நாளை, வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் நாளை. வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

19 views

பாத்திர கடையில், 2 - வது நாளாக சோதனை நீடிப்பு

மதுராந்தகம் பாத்திரக்கடையில், வருமான வரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

345 views

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு- மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரத்தில், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் ஆய்வு செய்தார்.

6 views

திருச்சியில் நடந்த விநோத நிகழ்வு : டீசல் பெற கடன் வழங்கும் மேளா

திருச்சியில் வாகனங்களுக்கு டீசல் பெற கடன் வழங்கும் நிகழ்வில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

209 views

சிலைக்கடத்தல் வழக்கு : தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்தில் உத்தரவு, இல்லாவிட்டால் 3 மாதமா?

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

104 views

உலக பெண் குழந்தைகள் தின விழா : பள்ளி குழந்தைகளுக்கு பூரண கும்ப மரியாதை

உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.