பத்திரப்பதிவு முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையிலேயே நடைபெறும் - தமிழக அரசு
பதிவு : செப்டம்பர் 15, 2018, 12:23 PM
ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவணம் பதிவு செய்யும் நடைமுறையானது  ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முன் பதிவு செய்த டோக்கன் வரிசையில் சேவை என்ற முறையில் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டு,  51 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களால் பெரும் வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடைமுறை செப்டம்பர் 17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் டோக்கன்களை 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் எனவும் அதன் மூலம் முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற முறையில் ஆவணப்பதிவு செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட டோக்கனுக்கான நபர் குறித்த நேரத்தில் வரவில்லை எனில் மென்பொருளில் உள்ள வரையறுக்கப்பட்ட காரணங்களில் தகுந்த காரணத்தை பணியாளர்கள் தேர்வு செய்துவிட்டு, பின்னர் அடுத்த டோக்கனுக்கான பதிவு நடவடிக்கையை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திர பதிவை சிரமுமின்றி கையாள மாவட்டப் பதிவாளர்கள், பதிவு அலுவலர்களுக்கு உரிய பயிற்சியை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இந்த புதிய நடைமுறை  செப்டம்பர் 17ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளதை பதிவு அலுவலர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தெரிவித்து இம்முறையை செவ்வனே செயல்படுத்த ஊக்குவிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

8 views

பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு

மதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.

24 views

"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்" - தினகரன் கண்டனம்

ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

79 views

கஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...

கஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.

242 views

20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்

டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

249 views

பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு

பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.