விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்
பதிவு : செப்டம்பர் 15, 2018, 08:03 AM
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. கீழநாஞ்சில்நாடு, சேந்தங்குடி, மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் பரிமள விநாயகர், வெற்றி விநாயகர், அரசமரத்தடி விநாயகர் என பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், விநாயகர் சிலைகள் அனைத்தும், ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, காவிரி துலாக்கட்டம் பகுதியில் கரைக்கப்பட்டன. 

பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்புகோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. விவேகானந்தர் பேரவை சார்பாக, பழத்தோட்டம், தியேட்டர் மேடு, நால்ரோடு, ரேயான் நகர், மீனம்பாளையம், பெரிய குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த 45 விநாயகர் சிலைகள், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. 

விநாயகர் சிலைகள், தாமிரபரணி ஆற்றில் கரைப்புகன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட 63 வினாயகர் சிலைகள், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. திருவட்டார், மேல்புறம் மற்றும் குழித்துறை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் அளப்பங்கோடு ஈஸ்வர கால பூதத்தான் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.

35 views

பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...

தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.

136 views

கேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...

சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

167 views

பிற செய்திகள்

சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.

34 views

50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

27 views

2 மகன்களை கொன்று தாய் தற்கொலை

கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

96 views

பலாத்கார முயற்சி : 84 வயது முதியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

178 views

கருப்பு தினம் : நீதிமன்றம் புறக்கணிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.

36 views

நீட் தேர்வு : கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள் கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.