"செப்.19-இல் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்" - கே.பி.முனுசாமி தகவல்
பதிவு : செப்டம்பர் 15, 2018, 12:58 AM
வரும் 19ஆம் தேதி மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்பி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. 


"செப்.22, 30-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம்" - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தகவல்

அதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வரும் 19 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.  அதேபோல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம், வரும் 22ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 30ஆம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3423 views

பிற செய்திகள்

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி

திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

92 views

"விவசாயத்தை விட்டு விடுங்கள்" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

156 views

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.