தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 04:23 PM
மாற்றம் : செப்டம்பர் 14, 2018, 04:52 PM
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க உடனே வழி வகை செய்ய வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க உடனே வழி வகை செய்ய வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளார். நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி காலமும், இம்மாத இறுதியுடன் முடிவடைவதால் நெருக்கடி அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

நிலக்கரி கையிருப்பை, உடனடியாக அதிகரிக்காவிட்டால்,சில அனல்மின்நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்திற்கு கிடைக்க நிலக்கரி, மற்றும் ரயில்வே அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மேம்பாலம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்

கோவை மாவட்டம் உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம், குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

116 views

"கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" - அமைச்சர் சண்முகம்

கே.சி.பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளித்தார்.

332 views

பிற செய்திகள்

சபாநாயகர் மீது பாஜக எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுச்சேரி சபாநாயகர் மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

444 views

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் - அமைச்சர் பெஞ்சமின் தகவல்

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

70 views

ஆளுநர் அழைப்பின் பெயரில் தான் சென்றோம் - ராகுல் காந்தி

காஷ்மீர் சென்று திரும்பிய தலைவர்கள், ஆளுநர் அழைப்பின் பெயரில் தான் சென்றோம் - ராகுல் காந்தி

27 views

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

63 views

"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

79 views

"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.