"மருந்துகளின் வர்த்தக பெயர்களை தடை செய்ய வேண்டும்" - மருத்துவர்கள்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 12:38 AM
மாற்றம் : செப்டம்பர் 14, 2018, 01:30 AM
தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாரிடோன், டி-கோல்டு, கோரக்ஸ் உள்ளிட்ட 328 மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தநிலையில், லாப நோக்கத்திற்காகவே இத்தகைய கலவை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க தலைவர் ரவீந்திரநாத்.

ஆனாலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்கு சென்று தடை உத்தரவு பெற்று வந்து விடுவதாக கூறும் மருத்துவர்கள்,

வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையை தடை செய்ய நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று  வலியுறுத்துகின்றனர்.

தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை விவகாரத்தில் மருத்துவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.

எல்லா கலவை மருந்துகளும் கெட்டது இல்லை என்றும், காசநோய், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சில கலவை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு பயன்படும் சில கலவை மருந்துகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். ஜெனரிக் மருந்துகளை, அரசே தயாரித்து வழங்க முன் வரும்போது, இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

9 ஆண்டுகளாக நாடக மேடை அங்கன்வாடியாக செயல்படும் அவலம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

79 views

சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ஜ.க.வினர் கொலை மிரட்டல் - பா.ஜ.க.வினரை கண்டித்து நந்தினி 4 மணி நேரம் போராட்டம்

காரைக்குடியில் தடையை மீறி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

344 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு

நாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன

50 views

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

105 views

கொத்தடிமை முறை இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை - பன்னீர்செல்வம்

கொத்தடிமை முறை இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

33 views

சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

திருப்பூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.