விநாயகர் சிலை : கட்டுப்பாடுகள் என்ன?...
பதிவு : செப்டம்பர் 13, 2018, 07:35 AM
மாற்றம் : செப்டம்பர் 13, 2018, 09:13 AM
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்க போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் .
இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி சென்னையில் 2 ஆயிரத்து 520 சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். இதேபோல சவுண்ட் சர்வீஸ் பயன்படுத்த உரிமம் மற்றும் அனுமதிக்கான சான்று, தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். ரசாயன மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருட்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தின் சுற்றுப்புறத்தில் இல்லாததையும், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என்று அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கரைக்கவேண்டும்.

பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.

விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், கரைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலமாக செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...

தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.

130 views

பிற செய்திகள்

பொங்கலை வழியனுப்பிய பெண்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பொங்கலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2 views

திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

8 views

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் - மாஃபா பாண்டியராஜன்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

10 views

கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்

தமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

8 views

தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த காளை - காளையை அமைதிப்படுத்திய பெண்

மணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பெண் உரிமையாளர் கிணற்றில் இறங்கி அமைதிப்படுத்தியதை தொடர்ந்து ​மீட்கப்பட்டது

79 views

2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.