முதலமைச்சருக்கு எதிரான திமுக புகார் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன ? - விரிவான அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
பதிவு : செப்டம்பர் 12, 2018, 05:05 PM
முதலமைச்சருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக தி.மு.கவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். அப்போது, திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நியாயமாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்  என வலியுறுத்தினார். 

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, புகார் மீது அன்றாடம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

734 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4330 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2426 views

பிற செய்திகள்

தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் சண்டை

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகாம் கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

8 views

கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி

கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

15 views

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விளக்கம்

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

23 views

ராணுவ வெடிமருந்து கிடங்கில் அதிகாலையில் வெடி விபத்து - 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே ராணுவ வெடிமருந்து கிடங்கில் இன்று அதிகாலையில் வெடி விபத்து நடந்தது.

10 views

"தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும்" - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 'தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

18 views

சிங்கப்பூரில் நடிகை அனுஷ்கா மெழுகுச் சிலை

நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு, சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஆளுயர மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.