பெட்ரோல் வாங்க புதுச்சேரிக்கு செல்லும் தமிழக மக்கள்
பதிவு : செப்டம்பர் 10, 2018, 06:38 PM
தமிழகத்தை காட்டிலும், பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பதால் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கின்றனர் கடலூர் நகர மக்கள்.
நாளுக்கு நாள் ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால் கடலூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. காரணம் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்திற்கான எரிபொருளை அங்கேயே நிரப்பி வருவது தான்.

தமிழகத்துடன் ஒப்பிடும் போது புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால் இங்கு படையெடுத்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிகம். இன்றைய நிலவரப்படி கடலூரில் ஒரு லிட்டர்  பெட்ரோலின் விலை 85 ரூபாய் 81 காசுகளாக உள்ளது. ஆனால் அதுவே புதுச்சேரியில் 79 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. இதேபோல் டீசலின் விலையும் கடலூரை விட புதுச்சேரியில் குறைவு தான்.

இதனால் கடலூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரிக்கு சென்று தங்கள் வாகனங்களை நிரப்பிச் செல்ல வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் புதுச்சேரியை நோக்கி செல்வதால் கடலூரில் உள்ள பெட்ரோல் பங்குகள் வெறிச்சோடிக் கிடக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ

பெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு சொல்லும் வகையில் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி இருக்கிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்.

50 views

மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை, இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

250 views

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்

மத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

54 views

பிற செய்திகள்

"பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கம்" - பிரதமர் மோடி

பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமான ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

19 views

மாமல்லபுரம் - " புராதன சின்னங்களை காண அனுமதி இலவசம்"

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19ந் தேதி முதல் 25ந் தேதி வரை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையால் கொண்டாடப்படுகிறது.

5 views

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை 8939 888 401 வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்

கஜா புயலால் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த வீடியோக்களை 89 39 88 84 01 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம்.

30 views

2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - பாடலுக்கான டீசரை வெளியிட்ட ரஹ்மான்

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

1164 views

திருட்டு செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 217 நபர்களுக்கு காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு அவர்களது செல்போன்களை மீட்டு கொடுத்துள்ளனர்.

175 views

கச்சா எண்ணெய் கப்பலில் கசிவு

கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பல் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் அதனை இறக்கும் போது குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கசிவு ஏற்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.