உலகிலேயே பெண் விமானிகள் அதிகம் உள்ள நாடு இந்தியா
பதிவு : செப்டம்பர் 06, 2018, 05:07 AM
உலகளவில் இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகமாக உள்ளனர். இது சர்வதேச சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு விமான போக்குவரத்து துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக பெண் விமானிகளில் 12 சதவீதத்தினர் இந்தியாவில் தான் உள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 7 லட்ச​த்து 90 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் கணித்துள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள அதிக சாத்தியக் கூறு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பெண் விமானிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்றும், விமானிகளுக்கான ஊதியத்தில் பாலின பாகுபாடு இல்லாதது, பெண்கள் அதிகளவில் இந்த பணியை விரும்புவதற்கு காரணம் என கூறப்படுகிறது. விமானிகள் ஊதியம் பயிற்சி நேர​ம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. விமானிகளுக்கான படி உள்ளிட்ட தொடக்க நிலை ஊதியம் வணிக வழக்குகளுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்கள் ஊதியத்துக்கு இணையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிகமானோர் விமானி பணிக்கு விருப்பம் கொள்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினரில் பெண்களின் பங்கேற்பு சதவீதம் குறைவாகவும், நிகர உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதம் அளவுக்கே பெண்களிக் பங்களிப்பு உள்ள நிலையில், விமானத் துறையில் பெண் விமானிகளின் வருகை சர்வதேச சராசரியை விட அதிகரித்து வருவது ஆச்சரியமான வளர்ச்சி என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3379 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5312 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2924 views

பிற செய்திகள்

நடன விடுதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்சநீதிமன்றம்

மும்பையில் நடன விடுதிகள் தொடங்க அம்மாநில அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகளில் மதுவும், நடனமும் இணைந்தே பயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

53 views

சூரத் : ஒரே இடத்தில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

12 views

அகமதாபாத் கண்காட்சியில் ஆடை வாங்கிய பிரதமர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அமதாவாத் கண்காட்சியில் ரூபே கார்டை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஓவர்கோட் வாங்கினார்.

18 views

"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது" - வெங்கய்யா நாயுடு

பிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.

10 views

நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

281 views

4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.