ரவி சாஸ்திரியின் செயல்பாடு எப்படி இருக்கு?
பதிவு : செப்டம்பர் 05, 2018, 07:23 PM
ரவி சாஸ்திரி மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு, திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி ஏன்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி  கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நியமிக்கப்பட்டார். 

விராட் கோலியுடன் அவர் கொண்ட நட்பின் காரணமாக, கோலியின் ஆதரவுடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே.

கேப்டன் மற்றும் வீரர்கள்  தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுவதும், அணியை எப்படி பலப்படுத்துவது, எப்படி யுத்திகளை கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதே பயிற்சியாளரின் பணி.


ஆனால் பயிற்சியாளர்கள் தாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என்றும், தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதையே இப்போதுள்ள கேப்டன்கள் விரும்புகின்றனர். இதனால் தான் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் என்பது தனிக்கதை.

சரி ரவி சாஸ்திரி, விராட் கோலியின் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்பதை தற்போது காணலாம்.

ரவி சாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு இந்தியா 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றி, 5 தோல்வி, 2 டிராவை இந்தியா கண்டுள்ளது. தோல்வி அடைந்த 5 போட்டிகளில் 4 போட்டியில் இந்தியா வென்றிருக்க வேண்டியது. அதற்கு வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.


ரவி சாஸ்த்ரி பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 22 போட்டிகளில் 18 போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 4 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதில் கடைசியாக நடந்த இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்திய அணி மீதுள்ள தற்போது குற்றச்சாட்டுகளே திறமையாக வீரர்கள் இருந்தும் தோல்வி அடைவது தான். இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், கேப்டன் கோலியுமே காரணம் என்று முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலியை முத்தமிட்ட ரசிகர் கைது

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது, ஆடுகளத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர், விராட் கோலியை கட்டி அணைத்து முத்தமிட்டார்.

2842 views

கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார்.

5962 views

பிற செய்திகள்

வரும் 26-ம் தேதி மும்பை சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை

சென்னையில் வரும் 26ஆம் தேதி மும்பை - சென்னை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை துவங்கியது.

23 views

ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றிபெற்றது.

28 views

கோமதி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பி.டி.உஷா

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் மகளிர் பிரிவில் கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

222 views

ஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

16 views

ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

61 views

ஐ.பி.எல்.இறுதிப் போட்டி சென்னைக்கு வாய்ப்பு மறுப்பு : சென்னையிலிருந்து மாற்ற காரணம் என்ன?

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

1704 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.