'எந்திரன்' பட விவகாரம் தொடர்பான வழக்கு : இயக்குநர் ஷங்கருக்கு அபராதம்
பதிவு : செப்டம்பர் 03, 2018, 09:28 PM
'எந்திரன்' திரைப்படம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான 'எந்திரன்'  படத்தின் கதை, தன்னுடையது என கூறி, ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இயக்குநர் ஷங்கர், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, கூடுதல் அவகாசம் கேட்டு ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று, நீதிபதி  சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி,  கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

1542 views

ஓரினச்சேர்க்கை தீர்ப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் வரவேற்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

37 views

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுக்க ஆலோசனை

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன், வாட்ஸ் ஆப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

173 views

விதிகளை மீறி விளம்பர பேனர்கள்...தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி...

சென்னையில் விமான நிலையம் முதல் சாந்தோம் வரை விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டுள்ளார்.

72 views

நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

48 views

பிற செய்திகள்

கருக்கலைப்பில் பலியான கர்ப்பிணி - செவிலியர் கைது

கருக்கலைப்புக்கு காரணமாக இருந்த செவிலியர் ஜோதிலட்சுமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

148 views

பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு..வேகமாக பரவி வரும் வீடியோ...

கோவை அருகே தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரிந்த பெண் பணியாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3953 views

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

11 views

"தங்களது மீதான குற்றச்சாட்டை மறைக்க அதிமுக முயற்சி" - டி.கே.எஸ். இளங்கோவன்

"இலங்கை போரின்போது, உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி"

34 views

விசைத்தறி பட்டறையில் பதுக்கிய போதை பொருள் : அதிரடி வேட்டையில் 220 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.