கொலை மிரட்டல் எதிரொலி : அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பதிவு : செப்டம்பர் 03, 2018, 02:51 PM
இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் கோவை வருவதாக மத்திய புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 3 பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் கோவை வருவதாக மத்திய புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்த ஜாபர் அலி, இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் மற்றும் அவர்களை வரவேற்க வந்த ஆசிக் ஆகியோரை மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். சமூக வலைதளத்தில் அர்ஜூன் சம்பத், அவரின் மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோருக்கு 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை கோவை போலீசார் அதிகரித்துள்ளனர்.

பிற செய்திகள்

தமிழகத்தில் நர்சிங் டிப்ளமா கலந்தாய்வு இன்று நிறைவு

நர்சிங் டிப்ளமா படிப்புக்கான மூன்றாம் நாள் கலந்தாய்வில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

17 views

நெல்லை : பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

87 views

ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தவில்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

83 views

தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

தஞ்சையில் தொழிலதிபர் இளங்கோவனை தாக்கியதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1222 views

சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடா?

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது இருப்பிலுள்ள நீரைக் கொண்டு ஒன்றரை மாதம் மட்டுமே குடிநீர் தேவையை சமாளிக்கும் நிலை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

64 views

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.