மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
பதிவு : செப்டம்பர் 03, 2018, 11:31 AM
மாற்றம் : செப்டம்பர் 03, 2018, 12:53 PM
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினா கடற்கரையில், தொடர்ந்து 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாக திகழும் மெரினா கடற்கரையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என வாதிட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி மணிக்குமார், அய்யாக்கண்ணுவின் போராட்டத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்தார். இதனிடையே வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் நடத்துவது தனிமனித உரிமை தான் என்றாலும், பொது அமைதியை பேணிக் காக்க வேண்டியதும் அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.




தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3398 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2933 views

பிற செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி : லாக்கரை உடைக்க முடியாத தால் நகைகள் தப்பின

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமயபுரம் கிளை செயல்படுகிறது.

15 views

பிப்ரவரி10 மற்றும்19ம் தேதிகளில் பிரதமர் தமிழகம் வருகை...

நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 10 மற்றும் 19 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி, தமிழகம் வருகிறார்.

8 views

கஜா புயல் நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் குளறுபடி : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஜா புயல் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாக கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

11 views

தேசிய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி : ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை சாம்பியன்

அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

16 views

நலவாழ்வு முகாமில் குதூகலிக்கும் யானைகள் உணவிற்காக தினசரி 10 டன் பசுந்தீவனம் வரவழைப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் நலவாழ்வு முகாமில் உள்ள யானைகளுக்கு, தினசரி, ஏழு முதல் 10 டன் வரையிலான பசுந்தீவன வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

7 views

கால்வாய்களை தூர்வார மேற்கொண்ட பணிகள் என்ன? - உயர் நீதிமன்றம்

சென்னையில், கால்வாய்கள் தூர் வார கண்காணிப்புக் குழு அமைக்க, சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.