தமிழக அரசியலில் உதயமாகிறதா புதிய கூட்டணி?
பதிவு : ஆகஸ்ட் 24, 2018, 12:26 PM
மாற்றம் : ஆகஸ்ட் 24, 2018, 01:33 PM
அண்மைக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள், புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகின்றனவோ என்ற எண்ணத்தை அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும்  கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின்  மரணம் மாநில அளவில் சில மாற்றங்களை உருவாக்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் ஜெயலலிதா மறைவின் போது திமுக பொதுக் குழுவில் அவருக்கு ,  இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சென்னையில்  நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சமீப காலமாக,  தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் உச்சத்தில் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் திமுக தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டது. ஆனால் தற்போது, அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.இதற்கிடையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டங்கள் சென்னையில் வருகிற 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. திமுகவுடன்  தோழமையாக உள்ள  தேசிய கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள் என்று கருதி வந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக அந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டாலின் விடுத்த அழைப்பை,  நேரில் சென்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம், அமித்ஷா,  தனது சென்னை வருகையை உறுதி செய்துள்ளார். காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பதால், அவருக்கு பதில் கட்சியின் மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது தமிழகத்தில் துளிர்த்துள்ள மாற்று அரசியல் , தேசியத்தை நோக்கியும் திரும்பியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது... இதனிடையே, அதிமுக செயற்குழுவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லியில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், தனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, அதிமுகவுக்கு ஏற்பட்ட அவமானமாகவே பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இதனால் அதிமுக ஆதரவு என்ற நிலைப்பாட்​டை கைவிட்டு,  திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக கையில் எடுக்கத் தொடங்கி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் , தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் இந்த அரசியல் திருப்பங்கள் அணி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்புள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக அரசியலில் புதிய கூட்டணி உதயமாகிறதா ? -அரசியல் விமர்சகர் 'தராசு' ஷ்யாம், பத்திரிகையாளர் கருத்து
தமிழக அரசியலில் புதிய கூட்டணி உதயமாகிறதா ? -அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து
தமிழக அரசியலில் புதிய கூட்டணி உதயமாகிறதா ? -அரசியல் விமர்சகர் கல்கி பிரியன் கருத்து


தொடர்புடைய செய்திகள்

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

924 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

552 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1011 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

124 views

பிற செய்திகள்

திருப்பதியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு - முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்பு

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, திருப்பதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

155 views

மெரீனாவில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நலம் விசாரித்த ஸ்டாலின்

நலம் விசாரித்த ஸ்டாலின் : தொண்டர்கள் மகிழ்ச்சி

62 views

"ஆளுநர் அனுசரனையுடன் நடந்து கொண்டார்" - அற்புதம்மாள்

ஆளுநரை பேரரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து மனு அளித்தார்

124 views

"பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது" - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.

526 views

"அரசியலில் இருந்து மோடியை அகற்ற சதி" - பாக்.- காங். மீது பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய அரசியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை அகற்ற, பாகிஸ்தானும் காங்கிரஸ் கட்சியும் விரும்புவதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.