கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 08:05 AM
மாற்றம் : ஆகஸ்ட் 12, 2018, 12:15 PM
கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இடுக்கி, வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட  11 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.  இதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 73 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பல மாவட்டங்களில் அதிகபட்ச மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கைஎர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதிக பட்ச எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆகஸ்ட் 12 வரை ரெட் அலர்ட்டும், அதன் பின்பு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பது வானிலை குறித்த அதிகபட்ச எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

செருதோணி அணையிலிருந்து வினாடிக்கு 8.5 லட்சம் லிட்டர் வெளியேற்றம்தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, இடுக்கியில் உள்ள செருதோணி அணையில் இருந்து  வினாடிக்கு எட்டரை லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதால், நேற்று மதியம் முதல்முறையாக 5 மதகுகள் திறக்கப்பட்டன. வினாடிக்கு எட்டரை லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஒன்றரை லட்சம் நீர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அணைக்கு படிப்படியாக நீர் வரத்து குறையும் போது, நீர் வெளியேற்றப்படுவது குறைக்கப்படும் என, கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்துள்ளார். 

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயநாடு

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வயநாடு அருகே உள்ள பனமரம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் முக்கிய சாலையான பத்தேரி, பனமரம் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்


மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய எதிர்க்கட்சி தவைரையும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்துச் சென்றார்

ஆலுவாவில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் சந்திரசேகரன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் முதல்வருடன் சென்றிருந்தனர். முகாம்களில் செய்துள்ள வசதிகள் குறித்து அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் ஆலுவாவில் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்

தொடர்புடைய செய்திகள்

மேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

201 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

472 views

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.

303 views

பிற செய்திகள்

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் : எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

93 views

வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

16 views

அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.

24 views

பாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு

டெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.

126 views

100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை

நூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

38 views

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.