ஆக.14ல் திமுக செயற்குழு கூட்டம் : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 01:23 PM
மாற்றம் : ஆகஸ்ட் 10, 2018, 01:57 PM
தி.மு.க தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.கவின் பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டிற்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் சென்றனர். சுமார் 10 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் 14ஆம் தேதி தி.மு.கவின் தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், தி.மு.கவின் அடுத்த தலைவர், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் யாரெல்லாம் நியமனம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.

170 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

405 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

422 views

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

176 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

847 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

76 views

பிற செய்திகள்

வாஜ்பாய் மரணம் : "இமயமே சரிந்தது போன்ற உணர்வில் உள்ளோம்" - தமிழிசை சவுந்திரராஜன்

அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

90 views

வாஜ்பாய் மறைவு : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

1468 views

மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

17 views

5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2060 views

தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் 52 லட்ச ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

16 views

227க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்

காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.