கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 07:07 AM
மாற்றம் : ஆகஸ்ட் 10, 2018, 11:28 AM
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கேரளாவின் இடுக்கி, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வெள்ள நீர் புகுந்ததது. மழை, மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூணாறை அடுத்த அடிமாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே  குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பாலக்காடு பகுதியில் வெள்ளம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், பாலக்காடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

கன்னூரில் இடிந்து விழுந்த வீடுகள் - கேரளாவுக்கு பேரிடர் மீட்பு படை விரைவு

கேரளாவில் கனமழை காரணமாக கன்னூர் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகள் இடிந்து விழும் காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.இதற்கிடையே, கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கேரளா விரைந்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

617 views

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தையை மழைநீர் கால்வாயில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

5620 views

"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

72 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

366 views

பிற செய்திகள்

பாம்புகளோடு சாகசம் செய்து நடுங்க வைத்த 'முரட்டு பக்தர்கள்'

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கும் பாம்புக் கடவுள் மனச தேவி அம்மன் கோயில் திருவிழாவில் பாம்புகளோடு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

110 views

விசாகா கமிட்டி என்பது என்ன...? அதன் பணிகள் என்ன..?

அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கவே 'விசாகா கமிட்டி'

190 views

"ஓ" போட கற்றுக்கொடுத்த ஆட்சியர்...

"ஓ" போட சொல்லி கொடுத்து அரங்கமே அதிரும் வகையில் இளைஞர்களை "ஓ" போட வைத்த ஆட்சியர்.

719 views

கேரளாவில் இயல்பு நிலை திரும்பியது : பேருந்து,ரயில் போக்குவரத்து துவக்கம்

கேரளாவில் இயல்பு நிலை படிப்படியாக திரும்புவதால்,பல இடங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.

262 views

பசியில் மக்கள் - பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி எறிந்த அமைச்சர்...

கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பிஸ்கட் பாக்கெட்களை கைகளில் வழங்காமல் தூக்கி எறிந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.

3502 views

"ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை" - மத்திய அரசு திட்டவட்டம்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வருகிற 22 ம் தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.

8432 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.