"ஒரே ஒரு முறை 'அப்பா' என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?" - ஸ்டாலினின் கண்ணீர் மடல்
பதிவு : ஆகஸ்ட் 08, 2018, 12:59 AM
மாற்றம் : ஆகஸ்ட் 08, 2018, 02:05 AM
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம் :


எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும் 
எனது ஆருயிர் தலைவரே, இம்முறை ஏன் 
சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், உடலில், ரத்தத்தில், சிந்தனையில், 
இதயத்தில் இரண்டறக்  கலந்துவிட்ட தலைவா! 
எங்களை எல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு, 
எங்கே சென்றீர்கள்?

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 
33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். 
இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் 
என்ற மன நிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன் 
சளைக்காமல் ஓடி, 'நாம் தாண்டிய உயரத்தை 
யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி 
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வைத்து பிறந்தநாளாம் 
சூன் 3ம் நாள் நான் பேசும் போது, 'உங்கள் 
சக்தியில் பாதியை தாருங்கள்' என்றேன். 
அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் 
நீங்கள் இரவலாகப் பெற்ற 
இதயத்தையும் யாசிக்கிறேன்,
தருவீர்களா தலைவரே?

அந்த கொடியோடு, இன்னும் நிறைவேறாத
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் 
வென்று காட்டுவோம்!

கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து 
ஒரு வேண்டுகோள்... ஒரே ஒரு முறை....

"என் மேலான அன்பு உடன்பிறப்புகளே!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு 
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு 
இயங்க வைத்திடுமே!

"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் 
அதனால் ஒரே ஒரு முறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?

கண்ணீருடன்,
மு.க. ஸ்டாலின்






தொடர்புடைய செய்திகள்

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

586 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1123 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

509 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

650 views

பிற செய்திகள்

"தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" - தங்கதமிழ்செல்வன்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

1 views

"ஆண்டிப்பட்டி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" - தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்டு

தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்ட ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லிவிட்டு தங்கள் மீது தங்க தமிழ்ச் செல்வன் குற்றச்சாட்டுகளை கூறட்டும் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.

4 views

"ஆசிரியர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.

4 views

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டம் : வெளிநடப்பு செய்த த.மா.கா

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

10 views

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதி

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதியாக இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 views

"சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.