வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 11:38 AM
மாற்றம் : ஆகஸ்ட் 07, 2018, 12:42 PM
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது.
கடந்த ஒன்றாம் தேதி, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து, சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு  4 கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டன. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் கழுதைப்புலி ஒன்று நேற்று தப்பிச்சென்றது. இதனைத்தொடர்ந்து, தப்பிச் சென்ற கழுதைப்புலியை தேடும் பணிகளில், தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பூங்காவில் உள்ள 5 இடங்களில் மாட்டு இறைச்சி யுடன் கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இரவு விடிய விடிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 6.30 மணியளவில் கழுதைப்புலி பிடிக்கப்பட்டது. தப்பிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு கழுதைப்புலி வந்தபோது, வனத்துறையினர் அதனை பிடித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.

534 views

பாண்டா கரடியின் 6 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் சான் டியகோ விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது.

71 views

பிற செய்திகள்

மனநலம் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

231 views

மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...

மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

255 views

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

92 views

கொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

31 views

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

17 views

வெறும் காகித விருதுகளால் எந்த பயனும் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

வெறும் காகிதங்களால் ஆன விருதுகளை வழங்குவதால் எந்த பயனும் இல்லை என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1227 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.