கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 11:14 AM
மாற்றம் : ஆகஸ்ட் 06, 2018, 12:36 PM
தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் நான்காயிரம் கோவில்களில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, தரிசனம், பூஜை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பதிவு செய்யும் வழக்கம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.இதற்காக சுமார் 10 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில்,ஆன்லைன் பதிவு முறை மூலம், சுமார் 500 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.ஆன்லைன் மூலம் வசூலாகும் பணம், அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக, தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய கோடிக்கணக்கான பணம் செலுத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த முறைகேட்டில், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

"ஆன்லைனில் பெறப்படும் காணிக்கைகளில் முறைகேடு" - பழனி கோவில் நிர்வாகிகள் புகார்

பழனி முருகன் கோவிலின் இணையப் பக்கத்தை நிர்வகித்து வந்த ஸ்கை என்ற நிறுவனம், ஆன்லைனில் வசூலாகும் காணிக்கை உள்ளிட்டவற்றை, கடந்த சில ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது பழனி கோவிலின் இணையதளப் பக்கம் கடந்த பத்து மாதங்களாக  முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல, ஸ்கை நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும்  திருச்செந்தூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களின் இணையதள பக்கங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.

122 views

அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்

தமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

440 views

திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.

6614 views

கோவிலில் கொள்ளை முயற்சி - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

எடப்பாடி அருகே கோவிலில் 4 பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது.

1556 views

பிற செய்திகள்

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை

சமூக வலை தளங்களில், அநாகரீகமாக விமர்சித்ததால், சென்னை இளைஞர் கலையரசன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டார்.

444 views

சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்

சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்

8846 views

அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

விஜயதசமி திருநாளை முன்னிட்டு நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

72 views

சென்னையிலிருந்து செல்லும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் : போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இன்று முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

993 views

ராஜராஜ சோழனின் 1033 வது ஆண்டு சதய விழா

தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது.

226 views

"ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த கல்வி முறையில் மாற்றம்?"- கல்வித்துறை அறிவிப்பு

ஜெயலலிதா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முப்பருவ கல்வி முறையில் மாற்றம் செய்வதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

365 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.