சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 02, 2018, 11:51 AM
மாற்றம் : ஆகஸ்ட் 02, 2018, 02:24 PM
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சி.பி.ஐ-க்கு அனுமதி
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, பல்வேறு சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவு விசாரித்து வந்தது. 

இந்தநிலையில், சிலை கடத்தல் தொடர்பாக, பொன். மாணிக்கவேல் இதுவரை ஒரு அறிக்கையை கூட சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணமாக கூறிய தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதன்படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக தற்போது தமிழக அரசு, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அயல்நாட்டைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ள இத்தகைய வழக்குகளை அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பால் தான் விசாரிக்க முடியும் என்பதால், வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் - ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி  சித்தண்ணனின் கருத்து 


சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் - அரசியல் விமர்சகர் சுமந்த.சி. ராமனின் கருத்து


தொடர்புடைய செய்திகள்

இலவச ஆடு வழங்கும் திட்டம் : பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி

இலவச ஆட்டுக்கான பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

8 views

"தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும்" - முத்தரசன்

தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

16 views

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

131 views

பிற செய்திகள்

சிதம்பரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பிடித்த இளைஞர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

18 views

மேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

16 views

கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

26 views

பேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிக் பாக்கெட் அடித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

47 views

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

13 views

கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிலுவை மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.