தினகரன் வீடு முன்பு தீ விபத்து : தீ காயங்களுடன் சாலையில் நடந்து சென்ற 'புல்லட் பரிமளம்'
பதிவு : ஜூலை 29, 2018, 01:32 PM
மாற்றம் : ஜூலை 29, 2018, 05:15 PM
அ.ம.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் கொண்டு வந்த பெட்ரோல் குண்டு அவரது காரிலேயே வெடித்தது.
சென்னை அடையாறில் தினகரன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச முயற்சி. அ.ம.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் கொண்டு வந்த பெட்ரோல் குண்டு அவரது காரிலேயே வெடித்தது. தினகரன் வீடு அமைந்துள்ள தெருவில் பரிமளத்தின் காரில் இருந்த பெட்ரோல் குண்டு வெடித்தது. தெருவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம். புல்லட் பரிமளத்தின் கார் ஓட்டுநர் கைது, மேலும் புல்லட் பரிமளத்திற்கு போலீஸ் வலைவீச்சு.


தினகரன் வீடு முன்பு தீ விபத்து : தீ காயங்களுடன் சாலையில் நடந்து சென்ற 'புல்லட் பரிமளம்' காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நகர செயலாளராக இருந்தவர் புல்லட் பரிமளம். இவர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த புல்லட் பரிமளம், தினகரன் வீட்டுக்கு காரில் பெட்ரோல் கேன்களுடன் வந்துள்ளார். இதுகுறித்து தினகரனின் உதவியாளர்கள் பரிமளத்திடம் விசாரித்து கொண்டிருக்கையில் அவர் காரில் இருந்த பெட்ரோல் கேனை பற்ற வைத்ததால் கார் தீ பற்றி எரிந்தது. இதில் புல்லட் பரிமளமும் தீயில் சிக்கி படுகாயமடைந்து, தீ காயங்களுடன் சாலையில் நடந்து சென்றார்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர்கள், புல்லட் பரிமளம் பெட்ரோல் குண்டுகளை வீச வந்ததாக தெரிவிக்கின்றனர். 'கொடும்பாவி எரிக்க முயன்றிருக்கலாம்' என்கிறது காவல்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பெட்ரோல் குண்டுகள் ஏதும் கைபற்றாத நிலையில் புல்லட் பரிமளம் கொண்டு வந்த அரிவாளை போலீசார் கைபற்றினர். பரிமளம் காரில் வைகோல்கள் இருந்ததால், அவர் கொடும்பாவி எரிக்கும் முயற்சியில் வந்திருக்காலம் என்றும் எதிர்பாரத விதமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

52 views

திமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை? - உதயகுமார், அமைச்சர்

திமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை? - உதயகுமார், அமைச்சர்

79 views

ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

191 views

இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்

இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்

568 views

பிற செய்திகள்

தெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றது ஏன்? - திருநாவுக்கரசர் விளக்கம்

தெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றது ஏன்? என்பது குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்.

1 views

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு ஸ்டாலின், அமிதாப், கமல் வாழ்த்து...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

121 views

நாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில் தி.மு.கவின் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்...

நாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில், தி.மு.கவின் கொடியை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

358 views

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...

மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

115 views

114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி

114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி

169 views

தேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து

தேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து

128 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.