காவேரி மருத்துவமனையில் கருணாநிதி - நலம் விசாரித்த தலைவர்கள் பேட்டி
பதிவு : ஜூலை 28, 2018, 01:15 PM
மாற்றம் : ஜூலை 29, 2018, 12:35 PM
கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
வயது மூப்பு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த கருணாநிதிக்கு, சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலையில் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் அவரது தனி மருத்துவர் கோபால், கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து மருந்துகள் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோபாலபுரம் இல்லம் வந்தனர். தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர். பின்னர் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையே, கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது கேட்கலாம்... 

"கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது" - நக்கீரன் கோபால், மூத்த பத்திரிகையாளர்திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது, அவர் நலமுடன் உள்ளார் - திருநாவுக்கரசர்


திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது, அவர் நலமுடன் உள்ளார் - திருமாவளவன்


20 நிமிட சிகிச்சைக்கு பின், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரானது, அவர் நலமுடன் உள்ளார் - ஆ.ராசா


கருணாநிதியின் வாழ்க்கை, வரலாற்றில் இடம் பெறும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்


கருணாநிதி எனும் இளைஞருக்கு எதும் ஏற்படாது - டிராபிக் ராமசாமி


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேறிக் கொண்டிருக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன்


விரைவில் கருணாநிதி முழுமையாக குணமடைவார் - அன்புமணி ராமதாஸ்


கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டி நெகிழ்ந்த திவாகரன்


கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர்


காவேரி மருத்துவமனைக்கு காங். மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் வருகைவதந்திகளை வைத்து கருணாநிதியின் உடல்நிலையை தீர்மானிக்க வேண்டாம் - லியோனிஅவசர கால நிலைமை வந்த போது எதிர்த்து நின்ற தலைவர் கருணாநிதி - குருமூர்த்திகருணாநிதி மீண்டும் உடல்நலம் பெற்று மக்கள் பணி செய்வார் - முத்தரசன்கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் - குலாம்நபி ஆசாத்

கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் - சேடப்பட்டி முத்தையாகருணாநிதி உடல்நிலை குறித்து கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு கூட்டாக பேட்டிகருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் - டிடிவி தினகரன்திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் - ஜி. ராமகிருஷ்ணன்கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தார் நிர்மலா சீதாராமன்


திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது, அவர் நலமுடன் உள்ளார் - திருநாவுக்கரசர்திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேறிக் கொண்டிருக்கிறது - திருச்சி சிவாகருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - டி.கே.எஸ் இளங்கோவன்
மிகப்பெரிய சகாப்தம் கருணாநிதி, வாழ்ந்தால் போதும் - பழ.கருப்பையா
திமுக தலைவர் கருணாநிதி முழு உடல் நலத்துடன் உள்ளார் - அழகிரிதி.மு.க. தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் தற்போதைய சூழல்


கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது - காவேரி மருத்துவ அறிக்கையில் தகவல்
 
கருணாநிதி நலம்பெறும் வரை திமுகவை ஸ்டாலின் மற்றும் கனிமொழி வழிநடத்துவார்கள் - மதுரை ஆதினம்

கருணாநிதி நலமுடன் உள்ளார் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

கருணாநிதிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - எம்.பி. டெரிக் ஓ பிரையன்


கருணாநிதி மீது சமூக வலைதள விமர்சனம் - சீமான் விளக்கம்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

619 views

பிற செய்திகள்

"திராவிடத்தை வீழ்த்த முடியாது" - மு.க ஸ்டாலின்

திராவிட இயக்கத்தை எவராலும் ஒரு போதும் வீழ்த்த முடியாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

14 views

மாநிலங்களவை தேர்தல் : 6 இடங்கள் யாருக்கு?

தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் அதிமுக -திமுகவுக்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

28 views

திருப்பூரில் திமுக பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

திருப்பூரில், தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், பெயர் போடாத காரணத்தால் திமுகவினரே அந்த பேனரை கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

46 views

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் : நாடாளுமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னையில் மாலையில் நடைபெறகிறது.

81 views

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி , எம்எல்ஏக்கள் ஊர்வலம்

17-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க எம்.பிக்கள், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மெரினாகடற்கரையில் ஒன்று திரண்டனர்.

21 views

முதல்வர் , துணை முதல்வர் டெல்லி பயணம் : மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் மாலையில் கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.