கருணாநிதி உடல்நிலை : நேற்று இரவு நடந்தது என்ன?
பதிவு : ஜூலை 28, 2018, 09:39 AM
மாற்றம் : ஜூலை 29, 2018, 07:02 AM
திமுக தலைவர் கருணாநிதி, மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த கருணாநிதிக்கு, சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலையில் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் அவரது தனி மருத்துவர் கோபால், கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து மருந்துகள் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோபாலபுரம் இல்லம் வந்தனர். தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர். பின்னர் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவமனை முன்பு குவிந்த திமுக தொண்டர்கள் - மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிப்பு

ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்பட்டது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்தது.

20 நிமிட சிகிச்சைக்கு பின் ரத்த அழுத்தம் சீரானது; தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் - ஆ.ராசா

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், ஸ்டாலின், அழகிரி,  துரைமுருகன், கனிமொழி, ராசாத்தியம்மாள், ஆ.ராசா உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனைக்குள் சென்றனர். 20 நிமிட சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல் நிலை சீரானதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறினார். திமுக தலைவர் நலமுடன் உள்ளதால், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ஆ.ராசா கேட்டுக்கொண்டார்.


கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை



அடுத்த சில நிமிடங்களில் காவேரி மருத்துவமனை தரப்பில், கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால் அதிகாலை 1.30 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும், கருணாநிதியின் உடல் நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்தது. 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2779 views

பிற செய்திகள்

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் : ஆளுநர் முடித்து வைத்ததாக அறிவிப்பு

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கடந்த 6 ந்தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

3 views

அமெரிக்கா சென்றார், விஜயகாந்த்...

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றுள்ளார்.

61 views

தமிழகத்தில் எய்ம்ஸ் - பிரதமர் மோடிக்கு நன்றி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

மதுரை மாவட்டம், தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்காக, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

14 views

டிச. 20- ல் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை : ஆறுமுகசாமி கமிஷன் தகவல்

வருகிற 20 ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது.

19 views

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்? - மு.க. ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியின் பெயரை, திமுக முன் மொழிந்தது ஏன் என்பது குறித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

155 views

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : புதுச்சேரியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குரிமை குறித்து விவாதிக்க, முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.