துணை முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பதிவு : ஜூலை 25, 2018, 12:24 PM
மாற்றம் : ஜூலை 25, 2018, 12:27 PM
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை விரைந்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார். விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

499 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2706 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4731 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

6079 views

பிற செய்திகள்

திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

297 views

ம.பியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, காங். : ஆளுநருடன் கமல்நாத் சந்திப்பு

மத்திய பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

23 views

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்

தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

12 views

3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்

ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.

18 views

ரஜினி பிறந்தநாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

14 views

செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறாரா..? - தங்க தமிழ்ச்செல்வன் பதில்

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.