ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பலி
பதிவு : ஜூலை 24, 2018, 10:48 AM
மாற்றம் : ஜூலை 24, 2018, 12:58 PM
சென்னையில், மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த 4 பேர், ரயில் நிலைய தடுப்புச் சுவர் மோதி உயிரிழந்தனர்.
சென்னை கடற்கரை முதல் திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயிலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காலை 8 மணியளவில், கடற்கரை -  தாம்பரம் இடையிலான ரயில் வழித்தடத்தில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுமார் 9 மணியளவில், பெரும்பாலான மின்சார ரயில்கள் விரைவு ரயில் தடத்தில் இயக்கப்பட்டன. கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று, பரங்கிமலை வந்த போது, படியில் தொங்கி பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் மீது, ரயில் நிலையத்தில் இருந்த தடுப்புச் சுவர் மோதியது. இதனால், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று இரவிலும், இதேபோல 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் 4 பேர் பலியாகியுள்ளனர்."தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை"

விபத்து குறித்து விசாரித்து வருகிறோம்; படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்காமல் இருக்கவும், தடுப்புச்சுவரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்."காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை"

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


பலியான 4 பேரில் 3 பேர் மாணவர்கள்

இதனிடையே, ரயில் விபத்தில்  உயிரிழந்த நான்கு பேரில் மூன்று பேர் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவர் சிவக்குமார்,  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் பரத், பாலிடெக்னிக் மாணவர் விஜய், எலக்ட்ரீசியன் நவீன்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு கால்களை இழந்த மூர்த்தி என்பவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, படுகாயமடைந்த விஜய் மற்றும் முகமது யாசர் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிவகுமாரின் நண்பன் கோரிக்கை


மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை - அமைச்சர் ஜெயக்குமார்தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1100 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3492 views

பிற செய்திகள்

"கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை"

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவு போடும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

5 views

சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை; சென்னை மாநகராட்சி மீது மக்கள் விரக்தி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை.

22 views

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...

சமூக நீதியை காத்த தலைவர் கருணாநிதி மட்டுமே - இயக்குநர் அமீர்

268 views

கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மன் பெண் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கடந்த ஒரு வாரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

592 views

சட்ட விரோதமாக மது விற்பனை - லஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது

போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற 2 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

165 views

காதல் விவகாரம்- இளம் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன்- மகேஸ்வரி தம்பதியின் மகள் சுஷ்மிதா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சுஷ்மிதா சடலமாக மீட்கப்பட்டார்.

2848 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.