மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடிநீர் திறப்பு...
பதிவு : ஜூலை 24, 2018, 07:49 AM
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவான 120 அடியை, எட்டி உள்ளது.  இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.இரவு 10 மணி நிலவரப்படி 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து  மேட்டூரை சுற்றியுள்ள, 21 வருவாய் கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு கரையோர கிராமத்திற்கும் நேரில் சென்ற காவல்துறையினர் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களை அறிவறுத்தி வருகின்றனர்.

மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும்  ஆபத்தான பகுதிகளில் நின்று பொதுமக்கள் புகைப்படங்கள் மற்றும்  செல்பி எடுத்து கொள்கின்றனர். காவல்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களை உண்டாக்க கூடும் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதேபோல் கல்லணைக் கால்வாய், காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகள் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.  ஆற்றில் நின்று செல்பி எடுத்தல்,  குளித்தல், 
மீன்பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4711 views

பிற செய்திகள்

தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4 views

வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, பாமக

ஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தேமுதிக, பாமக புறக்கணித்தனர்.

426 views

தேர்தல் களம் - விநோத வேட்பாளர்

பின்னோக்கி நடந்தவாறு வந்து வேட்பு மனுத்தாக்கல்

77 views

ஏ.டி.எம் களுக்கு கொண்டு வரப்பட்ட பணம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.