தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு
பதிவு : ஜூலை 22, 2018, 07:04 PM
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு அதிகாரம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா, மன்மோகன் சிங், காங்கிரஸ் முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள் உட்பட 239 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பாகவும் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவரான பிறகு, முதன் முறையாக அடுத்த மாதம், தமிழகத்துக்கு ராகுல் காந்தி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

562 views

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

79 views

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

89 views

பிற செய்திகள்

தமிழியக்கம் தொடக்க விழா.... திருநாவுக்கரசர், திருமாவளவன் பேச்சு

தமிழியக்கம் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று விழாவில் பேசிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

26 views

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு

குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

22 views

திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

961 views

கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்

வரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

309 views

மத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.

53 views

முதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.