தனியார் மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல் - சி.சி.டி.வி காட்சிகளை வைத்து, 5 பேர் கைது
பதிவு : ஜூலை 21, 2018, 08:57 AM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தி, மாடுமுட்டி காயமடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தி, மாடுமுட்டி காயமடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி, காலணியை கழற்றிவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி மற்றும் அவரின் உறவினர் வீரசேகரன் காவலாளி மகாலிங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சி.சி.டிவியில் பதிவாகியது. தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், கிளங்காட்டூர், வளநாடு, கீழப்பசலை ஆகிய கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், சந்தோஷ்குமார், முத்துராமு, ரஞ்சித்குமார், வசந்த் ஆகியோரை  மானாமதுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.